வித்தியாசாகர் சேது
வித்தியாசாகர் சேது அல்லது ஊக்ளி ஆற்றின் இரண்டாவது பாலம், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில், கொல்கத்தா மற்றும் ஹவுரா நகரங்களை ஊக்லி ஆற்றின் மீது கட்டப்பட்ட இப்பாலத்தின் வழியாக இணைக்கிறது. இப்பாலம் 822.96-மீட்டர்-long (2,700 அடி) நீளம் மற்றும் 35 மீட்டர்கள் (115 அடி) அகலம் கொண்டது. இதில் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்க சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கல்வியாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நினைவாக, 1992ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இப்பாலம் எஃகு வடக்கம்பிகளால் இழுத்துக் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் கட்டுவதற்கான செலவு ரூபாய் 388 கோடி ஆகும். இதனை ஊக்லி ஆறு திட்ட ஆணையரால் வடிவமைக்கப்பட்டது.இப்பாலத்தில் வாகனங்கள் செல்ல இடது பக்கம் மூன்று வரிசையும், வலது பக்கம் மூன்று வரிசைகளும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 12ன் ஒரு பகுதியாக இப்பாலம் உள்ளது.
Read article